Saturday, June 12, 2010

ரயில் வண்டி


இன்றுவிடுமுறை. மதிய உணவு உண்ட பின் அசுவராஸ்யமாய் ஒரு புத்தகம் படித்து கொண்டிருந்தேன். திடீர் என்று புகை படம் எடுக்கலாம் என்று ஆர்வம் பிறந்தது. நண்பனை அழைத்து கொண்டு வீட்டின் அருகே புகை படம் எடுக்க தீர்மானித்தேன். நண்பனும் உற்சாகமாய் கிளம்பினான். அப்பொழுது தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிறிது சாரல் மனதில் உற்சாகத்தை அதிகரித்தது. வீட்டின் அருகே சில புகை படங்கள் எடுத்த பின்பு அருகே உள்ள ரயில் பாலத்துக்கு சென்றோம். நண்பன் ரயில் வண்டியை புகை படம் எடுக்க யோசனை கூறினான். ரயில் வண்டி என்ற சொல்லை கேட்ட உடன் மனதில் இனம் புரியாத ஒரு குதுகலம்.

என் இந்த குதுகலம் என்று சிந்தித்தேன். சிறு வயது முதலே ரயில் வண்டியின் மிது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்தேன். அது குழந்தை பருவத்தில் பெரியவர்கள் "ரயில் பாரு ரயில் பாரு... " என்று சொன்னதால் உண்டான ஈர்ப்பு என்று தோன்றவில்லை . சிறு வயதில் ரயில் வண்டியை பார்பதிலே ஒரு தனி ஆர்வம் இருந்தது. என்னுடைய ஆச்சி விட்டிற்கு கோடை விடுமுறையில் சென்று இருப்பது வழக்கம். அங்கிருந்து இருந்து ரயில் நிலையம் சிறுது தொலைவில் தான் இருந்தது. ரயில் வண்டியில் இருந்து வரும் ஹாரன் ஓலி நன்றாய் ஆச்சி வீட்டில் கேட்கும் . நான் மாடிக்கு ( தட்டு என்று நாகர்கோயிலில் அழைப்பார்கள்) சென்று அங்குள்ள சிறு ஜென்னலில் ரயில் தெரிகிறதா என்று பார்பேன். வெறும் தென்னை மரங்களாக தெரியும். ஆனாலும் பல முறை முயற்சிர்த்திருகிறேன்.

சிறு வயதில் ரயில் வண்டியில் போவதை விட அதை பார்பதில் ஆர்வம அதிகம் இருப்பதை உணர்திருகிறேன். சில சமயம் பேருந்தில் செல்லும் போது ரயில் கடக்கும் பாதையில் பேருந்து நிற்கும் பொழுது,காத்திருக்கும் அசுவ்கரியத்தை விட, ரயிலை பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால்
சரக்கு ரயில் என்றால் சப் என்று இருக்கும் . அது ஏன் சரக்கு ரயிலுக்கும் பயணிகள் ரயிலுக்கும் இந்த பாகு பாடு என்று தெரியாது.
அதே போல் ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலுக்காக காத்திருப்பதும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியே! சிறு வயதில் எதை பார்த்தாலும் ஆச்சர்யம் , குதுகலம். தூரத்தில் தெரியும் சிவப்பு விளக்கு , நின்று கொண்டிருக்கும் பெரிய பெரிய ரயில் வண்டிகள் , தண்டவாளங்கள் . ரயில் நிலையம் மனதை கொள்ளை கொள்ளும் இடம் தான். ரயில் தாமதமாக வருவது என்றால் இன்னும் அதிக மகிழ்ச்சி. அந்த மக்கள் வெள்ளம்.. விளக்குகள் , ஓசைகள் எல்லாம் திருவிழாவை ஒத்து இருக்கும்.

சிறுது வயது ஏறி , பள்ளி மட்டும் கல்லூரி பருவத்தில் ரயில் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருவதாகவே அமைந்தது. அதுவும் ரயில் பயணத்தின் பொது மழை வந்தால் .. அந்த சில் காற்று , ஜன்னல் வழியாக ஓடி வரும் மழை நீர். அந்த மகிழ்ச்சியான உணர்வினை விளக்வே கவிஞன் ஆகலாம்.

வயது அதிகரித்து மனம் சிறுது பக்குவ பட்டு விட்டது என்று எண்ணி நான் தொலைத்த உற்சாகமான விசயங்களில் ரயில் பத்தின அந்த பிரமிப்பும அந்த பயணத்தில் இருந்த அந்த ஆனந்ததையும்.

அடுத்த முறை ரயில் பயணம் செல்லும் போது திரு விழா செல்லும் உற்சாகத்துடன் செல்ல போகிறேன்...

Tuesday, June 8, 2010

Kadhal Unarvugal

இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி ...

சமிபத்தில் ஒரு தமிழ் படம் பார்த்தேன் . அதில் வரும் மிக பிரபலமான வரி ..
" காதல நாம தேடி போக கூடாது .. அதுவா வரணும் .. நம்ம போட்டு தாக்கணும் ". அழகான வரிகள். கேட்ட உடன் நம் வாழ்வில் காதல் என்று ஒன்று நிகழ்ந்தால் அது இப்படி தான் இருக்க வேண்டும் என எண்ண வைக்கும் வரிகள் ... அனால் எல்லோர் வாழ்விலும் எல்லாம் ஒரே போல் நிகழ்வதில்லை. என்னுடைய காதல் கதை அதை போன்றது அன்று .. அது மிகவும் மெதுவாக அழகாக பூத்த ஒரு குறிஞ்ச மலர் ...

முதலில் அவளை பார்த்த தருணத்தில் எந்த ஒரு உணர்வும் ஏற்பட வில்லை.. அவள் ஒரு சாதாரண பெண்ணாக தோற்றம் அளிதாள். அமைதியான முகம். சாந்தமான குரல். சட்டென்று எதற்கும் இயங்காமல் , மிக பொறுமையாய் , நளினமாய் அவள் செயல்கள் .. தீர்கமான பார்வை.. இது தன் அவள் .. அவள் எந்த தருணத்தில் என்னுள் நுழைந்தால் ? அது என்னக்கு நிச்சயமாக தெரியாது .. ஆனால் அது கால சுழற்சியில் மிக பொறுமையாக நடந்த ஒரு நிகழ்வென்று எனக்கு தெரியும்..

காதல் உணர்வு .. இதை பற்றி நான் நிறைய கேள்வி பட்டதுண்டு .. சில மருத்துவர்கள் வட்ட மேஜையில் அமர்ந்து "காதல் என்பது ஹார்மோன்கள் சுரந்து ஏற்பெடும் ஒரு இயற்கையான உணர்வு " என்று விளக்கம் அளிப்பார்கள். காதலர்களுக்கு பிடிக்காத ஒரு விளக்கம் . நான் ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகின்றது. காதலில் ஒருவன் விழுகிறான் .. அவனில் ஒரு பகுதியை இழக்கிறான். துணையை தனில் ஒரு பகுதியாய் நினைக்கிறான் ..அதில் கரைகிறான் .. அற்புதமான விளக்கம். அற்புதமான விளக்கம் என்பதை விட என் மனதுக்கு பிடித்த விளக்கம் என கூரலாம். பெருமையாய் இருகின்றது .. நான் காதலில் விழுந்தது .

நாட்கள் செல்ல செல்ல என் காதல் பொறுமையாக வலிமை பெற்றது.. என்னை அது ஆட்கொண்டது .. என் மனதை அபகரித்தது .. முழவதுமாக என் வாழ்வை நிறைத்தது . எல்லா நாட்களும் அவள் நினைவாய் .. சொர்கத்திலும் நரகத்திலும் ஒரே நேரத்தில் வாழும் ஒரு வாழ்வாய் என் காதல் என்னுள் விஸ்வ ரூபம் கொண்டது.

விஸ்வ ரூபம் கொண்ட காதல் கடலை போன்ற ஆழத்துடன் மனதில் தேங்கி நின்றது .. அந்த கடல்அவளை காணும் தருணத்தில் அலைகளாய் கண்கள் முலமாக அவளை சென்று அடைய துடிக்கும் .. ஆனால் அவ்வலைகள் அவளிடத்தில் சிறிதும் அதிர்வினை ஏற்படுத்த வில்லை.
அந்த தீர்க்கமான பார்வை முன் என் அலைகள் வலுவிழந்து .. பின் வந்து கடலை சேரும். முழு காதல் கடலுடன் நான்.

காதல் உணர்வு மிகவும் அச்சார்யமானது .. அது மனதில் பரவசத்தையும் கொடுக்கும் .. துன்பதையும் கொடுக்கும் .. அன்பினையும் வளர்க்கும் .. பகைமையையும் தூண்டும் .. பகிர்தலை புரியவைக்கும் .. எனினும் சுயநலத்தை உணர வைக்கும் .. அது சகல உணர்வினை தருவது போல் தைரியத்தையும் தரும் .. மிக கொடுரமான பயத்தையும் தரும் ..

மனிதன் மனதில், இவ்வுனர்வுகுளுக்கு மத்தியில் எப்போதும் தேர்வு செய்யும் சுதந்திரம் இருதும் .. சில தருணங்களில் சில உணர்வுகள் வலு பெற்று இருக்கும் ..கரணம் இன்றி .. ஆம் என்னுள் என்னை அறியாமல் என் காதல் சொல்ல எனக்கு தைரியம் இல்லை..காரணம் அற்ற பயம் ... நான் வெறுக்கும் பயம்

நாட்கள் சென்றது .. என்னுள் காதல் கடலாய் .. பயம் அதற்கு ஆணை யாய் ..

காலம் மனிதனை மாற்றும். மாற்றம என் உள்ளும் நிகழ்ந்தது .. நான் தைரியமாய் அவள் முன்னால்.. காதல் சொல்ல தயாராய் .. என உணர்வகளை வார்த்தைகளாகி ..அவள் முன்னால் நிற்கின்றேன்..
அவள் அதே தீர்க்கமான பார்வையுடன் .. " நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும் .."

நான் பரவசத்துடன் "சொலுங்க"

" எங்கப்பா எனக்கு மேரேஜ பிக்ஸ் பண்ணிட்டாரு " நான் வேலைய ரிசைன் பண்ண போறேன் "

"ஒ அப்டியா ரொம்ப சந்தோசம் .. "

"நான் வரேன் " ..

"ஓகே . விஷ் யு ஆல் தி பெஸ்ட் . "

என்னுள் இருந்த காதல் கடல் ஆழம் அதிகம் பெற்று பாரம் அதிகம் ஆனது போல் ஒரு உணர்வு

அதே பாரத்துடன் வாழ்வை கடப்பது என்று முடிவு செய்தேன் .. பாரமாய் இருந்தாலும் .. சுகமாய் இருந்தது அந்த உணர்வு ..

Saturday, June 5, 2010

Jayakanthan Short Story - Thuravu

இந்த கட்டுரை என்னுடைய மிக பிடித்தமான சிறுகதை ஆசிரியர் ஜெயகாந்தனின் சிறுகதை துறவு பற்றியது. அக்கதைன் மின்பதிப்பு இதோ உங்களுக்காக


இக்கட்டுரை , இக்கதை பற்றிய விமர்சனம் அல்ல. ஜெயகாந்தனுடைய கதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் ..... இல்லை. ( என்னடைய ஈகோ கோடிட்ட இடத்தை நிரப்ப மனம் தர வில்லை). இக் கதை என்னை மிகவும் பாதித்தது. எனவே இக்கதை பற்றிய என்னுடைய பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொண்டேன்

இக் கதையை படித்த உடன் ஆசிரியர் வாழ்கையை எந்த அளவுக்கு ஆராய்ந்து இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சர்யத்தை அள்ளிகின்றது.


வாழ்கையில் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு மட்டும் தனி சிறப்புடன் நிகழ்வதாக என்னும் பருவம் சோமுவின் பருவம். எனக்கும் அப்பருவத்தில் ஆசிரியர் குஉறும் வேதாந்த பித்து பிடிதிரின்தது உண்மை. அப்பருவத்தில் தான் நான் சைவம் உண்ணும் வழக்கத்தையும் கடை பிடிக்க ஆரம்பித்தேன். உலகில் உள்ள அனைவரையும் அஞநிகளாக பார்த்த பருவும்.

வாழ்கை நம்முன் முடிச்சை அவிழ்க்க அவிழ்க்க நாம் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
எனினும் பந்த பாசங்களை பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள் வேததில் குறியுள கருத்துகளுக்கு முரணாக உளது. அது எந்த அளவுக்கு உண்மைஎன்று அறியும் பருவத்தை நான் இன்னும் அடைய வில்லை.

தாதா கதாபத்திரம் வாழ்கை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணத்தை நமக்கு புலப் படுத்திகிறது. அவருக்கு கர்வம் சிறிதும் இல்லை என்பது பல நிகழ்சிகள் முலம் நமக்கு ஆசிரியர்விளக்கிறார். ஜெயகாந்தன் தனுடைய வாழ்கைய இவ்வாறு வாழ்ந்து இருப்பார் என்பது எனுடைய கணிப்பு.



இறுதியாக இவ்வரிகள் முலம் ஆசிரியர் வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிவிக்கிறார்.


எனக்கும் இந்த கிளைமாக்ஸ் கருத்தில் உடன்பாடு இருகின்றது.
எனினும் எனுடைய பழைய கூகுளே ச்டடுஸ் மெசேஜ் ஒன்று நினைவுக்கு வருகின்றது
Tomorrow is a new day and a new perspective...
Note : There are lot of spelling mistakes .. Its difficult to correct it with Back space and space bar. Kindly bear it..let me know if there is a easier way ..

Cheers,
Rag.