Sunday, April 29, 2012

Saturday, April 28, 2012

பர்ஸ்ட் பீர்

"டேய் எழுந்துருடா .. மணி எட்டாவுது!! ", அம்மா கத்ரதுல தூக்கம் போச்சு . " என்ன மா, அதான் போன வருசமே பப்ளிக் முடிஞ்சிருசுல, இன்னும் ஏன் டார்ச்சர் பண்ற?".
" அதுக்காக ஒரு வயசு பையன் காலைல எட்டு மணி வரைக்குமா தூங்கறது? " சீக்கிரம் எந்திச்சு போய் ஒரு கால் கிலோ தக்காளி மட்டும் வாங்கிட்டு வா ..

கடைக்கு போறது எப்போவுமே கடியான ஒரு விஷயம் தான்.. ஆனா மார்க்கெட் போறதுனா எனக்கு இப்போ ஒரு தனி இஷ்டம். ஒரு வயசு பையனுக்கு இஷ்டம் நா என்ன விஷயமா இருக்கும்? அங்க மரத்தடில கடை போட்டிருக்க ஒரு பொண்ணு தான் மேட்டர் !!

எனக்கு கூட பொறந்த அக்கா தங்கச்சி இல்ல.. படிக்றதும் பாய்ஸ் ஹை ஸ்கூல். அதனாலே ஒரு பொண்ணு என்ன யோசிப்பா எப்படி பழகுவா ஒன்னுமே தெரியாது .. எனக்கும் பொண்ணுங்க கிட்ட எப்படி பழகறது .. என்ன பேசறதுன்னு தெரியாது..

ரொம்ப சரளமா பொண்ணுங்க கிட்ட பேசற பசங்கள பாத்தா ஆச்சர்யமா இருக்கும்.. எனக்கு பொண்ணுங்க கிட்ட பேசும் போது அங்க இருக்ற எல்லாருமே என்னயே பாக்ற மாறி ஒரு பீலிங்.. அட வைர முத்து சொன்ன மேட்டர் கூட இத கம்பர் பண்ணாதீங்க. அவரு என்ன  சொன்னாருனா காதலிக்கும்  போது காக்கை  கூட உன்ன கண்டுக்காது  ஆனா உலகமே உன்ன பாக்ற மாறி ஒரு பீலிங்குனாறு .. ஆனா எனக்கு எந்த பொன்னு  கூட  பேசனாலும் அப்டி ஒரு மட்டமான பீலிங் ..

சரி!! திரும்பி இந்த மார்க்கெட் பொண்ணு மேட்டர் கிட்ட வரேன் !! அவ கடைல நான் ஒரு தடவ கூட காய் வாங்குனதில . பக்கத்து கடைல தான் எப்போவுமே .. ஆனா கண்ணு புல்லா அவ கடைல தான் இருக்கும்.. தமிழ் படத்துல இருந்து நான் கத்துகிட்டஒரே விசயம் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணனும்னா அவளுக்கு தெரியற மாறி அவள பாக்கணும்னுடறது தான் ..

அதனால அங்க போய் அவள பாத்துடே இருபேன். அவளும் அப்போ அப்போ திரும்பி பாப்பா .. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள ஏதோ பண்ணும். நான் ஒண்ணும் வேஸ்ட் இல்ல.. ஏதோ ஸ்பெஷலா  இருக்ற மாறி ஒரு பீலிங்.

இப்டி ஒரு ஆறு மாசம் ஓடி போச்சி .. அவளுக்கு நல்லா தெரியும் நான் அவள பாக்றேன்னு. நான் அங்க இருக்கும் போது அவளுக்கு ஒரு தனி  உற்சாகம் வரும்.. சுத்தி இருக்ற எல்லார்கிட்டயும் சிரிச்சி சிரிச்சி பேசுவா. எந்திரிச்சி சுறு சுறுப்பா ஓடுவா.. அதலாம் பாக்கும் போது மனசுக்குள்ள  ஒரு குஜால் ..  

ஒரு வயசு  பையன ஒரு பொண்ணு பாக்கலன்னு வச்சுகோங்களேன் .. லைபே வேஸ்ட் மாறி ஒரு பீலிங்..நான் அவள பாக்றத என் ப்ரெண்ட்ஸ்கும் தெரியும்..ஒரு பொண்ணு நம்மள பாத்தா  பிரெண்ட்ஸ் கிட்ட ஒரு ஹீரோ மாறி சீன் போடலாம்...

அவங்களையும் கூட குட்டிட்டு வந்து வெட்டியா நிக்க வச்சாலும் ஒண்ணும்  சொல்ல மாட்டாங்க .. பெரிய சேவை செய்ற மாறி கூடவே வந்து ஹெல்ப் எல்லாம் பண்ணுவாங்க. அதுவும் வீட்டு முண்ணாடி நின்னு "வாடா" அப்டின்னு கத்துனா .. அவங்க அம்மா சத்தம் கேக்கும்.. "ரெண்டு நிமிஷம் இருடா, டிபன் சாப்டு போய்டுவ". அம்மா நான் ஒரு முக்கியமான வேலையா போறேன் .. வந்து சாப்டுகேறேன்". 

 ச! சான்சே இல!! நாம சைட் அடிக்கிறது நாம பிரிண்டுக்கு எவ்வளுவு முக்கியமுன்னு நினைக்கும் போது . எனக்கு பெருமையா இருக்கும்..

இப்டியே டைம் பாஸ் ஆய்டேருந்துது .. ஒரு வருஷம் ஓடி போச்சி.. இபோ பிளஸ் டூ ..ரொம்ப பிஸி ஆயாச்சு . சனி , ஞாயிறு டியூஷன் அது இதுனு டயமே கிடக்கறது இல்ல .. அப்போ அப்போ மார்க்கெட் போகும் போது அவ ஏக்கமா பாப்பா .. நானும் ஒரு குற்ற உணர்ச்சியோட அவள பாத்துட்டு ..
சட்டுனு திரும்பி வந்துருவேன் ..

பப்ளிக் எக்ஸாம் போது அங்க இங்க நகர்ல .. ஒரு மாசம் டைட்டா ஓடுச்சு .. அவள பத்தி நெனச்சாலும் .. அங்க போக முடில..

எக்ஸாம் முடிஞ்சு .. பிரீ பேர்டா வெளிய வந்தாச்சு. அடுத்த நாளே நேரா மார்க்கெட் போய் நின்னாச்சு..அவ எனைய திரும்பி கூட பாக்கல. சாரி கட்டியிருந்தா..உத்து பாக்கும் போது தான் தெரிஞ்சுது .. கழுத்துல ஒரு மஞ்ச கயிறு .. மனசு ஒடிஞ்சு  போய்டேன்.

பக்கதுல இருந்த ப்ரென்ட் கிட்ட" மச்சான் அவ கழுத்துல தாலி டா" . " உடுறா மச்சான் இந்த பொண்ணுங்களே இப்டி தான்.." வாழ்கையல மொத  தடவையா பீர் கடைக்கு சைக்கிள விட்டோம்"


Time pass


Tuesday, April 24, 2012

கனவு

கண்முன்னே காட்சிகள் ஓடுகின்றன... நான் திகைபடைகின்றேன். என்கீருகின்றேன்? என்ன செய்து கொண்டிருகின்றேன்? தெரியவில்லை.சிறுது நேரத்தில் கேள்விகள் மறைந்து போயின.. மெதுவாக காட்சிகளை நம்ப தொடுங்குகின்றேன், காட்சிகளோடு ஒன்றினைகிறேன் , செயல்பட துவங்குகின்றேன்.

படத்தை இடையில் இருந்து பார்க்கின்ற மாதிரி ஒரு உணர்வு. சுற்றி நடக்கும் காட்சிகள் இடை விடாது தொடர்கின்றன. இது கனவு அல்ல என்பதை போல் இடை விடாத தொடர்ச்சி. நிறுத்தி நிதானிக்க நேரமில்லை.. செயல் படுகின்றேன். காட்சிகள் மாற மாற செயல் படுகின்றேன்.

கனவினில் அழுகின்றேன், சிரிகின்றேன். தோல்வி வருகின்றது - துவண்டு போகின்றேன்,வெற்றி வருகின்றது - மகிழ்ச்சி அடைகிறேன். காட்சிகோளோடு போராடுகின்றேன்,அல்லல் படுகின்றேன். இது கனவு என்று தெரிந்தால் கனவு இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா? தெரியாது. ஆனால் இது கனவு என்று தெரியாததால் எவ்வளவு போராட்டம்? கனவினில் எனது பிம்பத்தை காக்க போராட்டம்.



Abstract Faces


சிரிப்பு,அழுகை, மகிழ்ச்சி,துக்கம்,தைரியம்,பயம் சுழல்கின்றது.. நானும் கனவோடு சுழல்கின்றேன்.. நடுவில் சிறுது தயக்கம்.. இது கனவா என்ற சின்ன ஐயம் ... ஒன்றிரண்டு பேர் ஆம் என்கிறார்கள். விழித்திரு கனவு கலையும் என்கிறர்கள். நான் எப்படி விழிப்பது என்கிறேன்? புரியவைப்பது கடினமாய் இருகின்றது. கனவுக்குள் இது கனவு என்று புரிய வைப்பது கடினம் தான்.

சில சமயம் தூக்கம் கலையும் ஒரு உணர்வு. விடியல் சத்தங்கள் காதில் மெலிதாய் கேட்கின்றது .. கனவும் தொடர்கின்றது.. விழிக்க எத்தனிகபதுற்குள் கனவு காட்சிகள் மனதை அகார்மிக்கின்றன. விழிக்க மனமில்லை.. மிண்டும் கனவினில் அழுகின்றேன் சிரிகின்றேன்

காட்சிகள் தொடர்ந்து மாறுகின்றேன் .. நானும் கனவோடு சுழல்கின்றேன்..

கலையுமா எனுடைய கனவு?

Thursday, April 19, 2012

உணர்வுகள்

ஒரு நாளில் நம்முள் எத்தனை விதமான உணர்வுகள் வந்து செல்கின்றன. அன்பு,கருணை வெறுப்பு, கோபம்,பொறாமை,மகிழ்ச்சி , சோகம்,பயம். இதனின் கலவைகள்!!. பயம் கலந்த கோபம், சோகம் கலந்த மகழ்ச்சி,கருணை கலந்த அன்பு இப்படி பல பல கலவைகள்.

நம்முடைய ஒரு நாளானது, இப்படி பல உணர்வுகளின் கலவைகளாய் அமைகின்றது. நாம் ஒரு நொடியிலாவது இவ்வுணர்வுகளின் பிடியில்லாமல் இருகின்றமா? என்னால் நிச்சியமாய் சொல்ல முடியவில்லை. உணர்வுகளின்
வீர்யத்தின் தன்மை வெவேராக இருக்கலாம். ஆனால் எப்போதும் நாம் உணர்வுகளின் பிடியிலேயே இருகின்றோம்.

பல சமயங்களில் நாம் நம்முடைய வீர்யமான உணர்வுகாலயே அடையாளபடுத்த படுகின்றோம்.
இவ்வுணர்வுகளின் அடிப்படை என்ன? நம்முடைய உணர்வுகளுக்கு ஆதாரமாய் இருப்பது எது? மேல் ஓட்டமாய் சிந்தித்தால் நம்முடைய உணர்வுகளுக்கு நாம் இருக்கும் சூழ்நிலையே காரணம் என்று நினைக்க தோன்றுகின்றது. பல புத்தகங்கள், வாசகங்கள் அதையே சொல்கின்றன.
"மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொள்ளுங்கள் என்று!!"

ஆனால் அறிவியல் ரீதியாக சிந்தித்தால் ஒவ்வொரு உணர்வும் நம்முள் ஏற்படும் ரசாயன மாற்றமே! இதே கோட்டில் சிந்தித்தால் நம்முடைய ஒவ்வொரு நாளும் நம்முள் ஏற்படும் ரசாயன மாற்றம் மட்டுமே. இர்ரசாயன மாற்றத்திற்கு நம் சூழ்நிலைகள் ஒரு தூண்டுகோலாய் அமைகின்றது.
ஆனால் பல சமயங்களில் நம் சூழ்நிலைகள் மாறினாலும் நம் உணர்வுகள் தேங்கி விடுகின்றன.

எடுத்துகாட்டாக நாம் அலுவலகத்துக்கு வாகன நெரிசலில் செல்லும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வு அலுவகத்தில் குளுருட்டபட்ட அமைதியான சூழ்நிலையிலும் தொடர்வது ..

நம்முடைய வாழ்வின் தரத்தை நாம் பல்வேறாக அளகின்றோம். நம்முடைய பொருளாதார நிலைமை, நாம் சேர்த்து வைதிருகோம் பொருட்கள் , நல்ல உணவு மற்றும் குடி நீர் கிடைப்பது .. இப்படி பல பல..அனால் இவை அனைத்துமே வெளி நிலையில் உள்ள வாழ்வின் தரத்தையே தீர்மானிகின்றன.. உண்மையில் நாம் வாழ்வின் தரம் நம்முடையே இந்த நொடி பொழுதின் உணர்வாலேயே தீர்மானிக்க படுகின்றது..சற்று சிந்தித்து பார்த்தால் நாம் ஒரு ஐந்து நட்சதர விடுதியில் எல்லா சொகுசு வசதிகளும் கிட்டும் அறையில் தங்கி இருந்தாலும் , மனம் முழவதும் கோபம் ,
பொறாமை நிறைதிருந்தால் நம் வாழ்கை தரம் உயர்ந்த நிலையில் உள்ளது என்று எண்ண முடியுமா?

இதற்கு நாம் என்ன செயலாம்? நம்முடைய பொருளாதார மற்றும் உடல்நிலை வளர்சிக்காக நேரம் செலவளிப்பது போல நம்முடைய மனதின் மேம்பாற்றிககவும் நேரத்தை செலவிடலாம். குறுகிய மனதை அகலமாக்கும் புத்தகங்கள் , நல்ல இசை , விருப்பமான கலையை கற்றல் முதல் படியாக அமையலாம்.

மேலும் நம் குழந்தைகளுக்கு பொருளாதார , உடல் நிலை வளர்ச்சியில் அக்கறை காட்டுவதை போலவே , மனதின் மேம்பாற்றிகாக சில முயற்சிகளை எடுக்கலாம். பொருளாதார மேம்பாட்டை மட்டுமே குறிகோளாக கற்பிக்கும் பள்ளிகளை தவிர்க்கலாம்...

நம்முடைய கலாச்சாரத்தில் மனதின் மேம்பற்றிகாக பல பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல கண்டுபிடுபுகள் உள்ளன.. அவற்றுள் சில வற்றை நாம் பின்பற்றினாலே உடனடி மாற்றத்தை உணரலாம்..

உங்களுக்கு சில வழிமுறைகள் தெரிந்தால் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் ..