Wednesday, May 2, 2012

வெற்றிப்பயணம்


காலையில் எழுந்திருகவே மனமில்லை. கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகள் அதிகாலையிலயே விழித்து உற்சாகத்துடன் விளையாடி கொண்டிருந்தனர்.எனக்கு கட்டிலை விட்டு எழுந்திருகவே மனமில்லை. வேலைக்கு செல்ல வேண்டுமென்ற  எண்ணமே கட்டிலின் மீது
ஈர்பை ஏற்படுத்தியது. அப்படி என்ன கிழிக்கின்ற வேலை என்று யோசிகிரிர்களா? ஆம் என்னுடைய வேலை கிழிக்கின்ற வேலை தான். தமிழ் நாட்டு  போக்குவரத்து துறையில் நடத்துனர் வேலை.வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு இந்த வேலை பிடித்தே இருந்தது. ஆனால் காலப்போக்கில் சுவை இழந்து  விட்டது. எண்ணிப்பார்த்தால் என்னுடைய சுவையின்மைக்கு காரணம் என்னுடைய வேலையில் பெரிதாக எதுவும் சாதித்து விட்ட ஒரு உணர்வு  இல்லாததே காரணம் எனலாம். நாளாக நாளாக அந்த எண்ணம் என்னுள் வேர் ஊன்ற  ஆரம்பித்தது. என்னுடைய எரிச்சலும்  பெரிதாகின்றது.

வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்களில் " இது என்ன பெரிய வேலை, கிழித்து கொடுக்கின்ற வேலை தானே என்ற எண்ணம் உருவாயிற்று. அதே எண்ணம் எனக்கு அலட்சியத்தையும், பயணிகளுக்கு ஒரு எரிச்சல் பிடித்த நடத்துனரையும் கொடுத்தது.இதே எண்ணங்களுடன் எழுந்து சென்று குளித்து முடித்து உண்ண அமர்ந்தேன்.

மல்லி பூ நிறத்தில், இட்லி ஆவி பறக்க தட்டிலிருந்தது. தொட்டு கொள்ள கத்திரிக்காய் சாம்பார். மனைவி பரிமாறி விட்டு அடுபடிக்கு சென்றாள். நான் உண்ண ஆரம்பித்தேன். உப்பு சிறிது குறைவாக இருந்தது. அந்த சின்ன சந்தர்பம் என்னுடைய எரிச்சல் வெளி கொட்டுவதற்கு ஒரு வடிகாலை அமைந்தது.ஓயாத மழை போல் தொடர்ந்து அரை மணி நேரம் தொண்டை கிழிய கத்தினேன். என் மனைவி பூமி தாய் போல் பொறுமையாய் என்னை புரிந்தவளாய் எல்லாவற்றையும் கேட்டு கொண்டு என்னுடைய மதிய உணவை கட்டி கொண்டு இருந்தாள்.

அரை மணி நேரம் கத்தி விட்டு குற்ற உணர்ச்சியுடன் அலுவலகத்துக்கு புறப்பட்டேன். அதே கூட்ட நெரிசல்,வெப்பம், வியர்வை. என்னுடைய எரிச்சலை கிடைபவர்களிடம் உமிழ்ந்தேன். சில்லறை இல்லாதவர்கள் இறக்கி விடப்பட்டார்கள். ஊருக்கு புதிதாக வந்தவர்கள் சிறிது விவரம் கேட்டாலும் நல்ல வாங்கி  கட்டி கொண்டார்கள்.என்னுடைய வேலை எனக்கு மிகவும் சாதரனமாக தோன்றியது. இதை எளிதாக என்று எண்ணி கொள்ளாதிர்கள். நான் சொல்வது என்னவென்றால் "இதெல்லாம் ஒரு வேலையா" என்ற எண்ணம். இந்த எண்ணம் மேலோங்க மேலோங்க என்னுடைய எரிச்சல் வெறுப்பு எல்லாம் பன்மடங்கு அதிகரித்தது.  இதே எண்ணகளுடன் நாள் முழுவதும் உழைத்ததால் மிகவும் களைபடைந்தேன்.

என்னுடைய ஒரு நாளில் எனக்கு உற்சாகம் அளிக்கும் சிறது நேரம் நான் மாலையில் என் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் தான். அவர்களுடன் விளையாடுவதும் பேசுவதும் சிரிப்பதும் என்னுடைய மனதின் காயத்திற்கு ஒரே மருந்து.

நான் தூரத்தில் என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தை என் தெருவில் நுளைத்ததுமே என்னுடைய மகன்கள் என் வாகனத்துடன் ஓடி வர ஆரம்பித்தனர். என்னுடைய உதட்டோரத்தில் புன்சிரிப்புடன் வாகனத்தை மெதுவாக ஒட்டி சென்று நிறுத்தினேன்.

என்னுடைய சின்ன மகனை கையில் அள்ளி கொண்டேன். பெரிய மகன் கை புடித்து என்னை விட்டுக்குள் அழைத்து சென்றான்.

உள்ளே நுழைத்தும் என் பெரிய மகன் ஆரம்பித்தான்.

"அப்பா உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? இன்னிக்கு ஒரு சூப்பர் மேட்ச் விளையாடினோம்!"

"எங்கே போய் விளயாடுனே?"

கண்கள் பெரிதாய்" பிள்ளையார் கோயில் கிரௌண்ட் ல ப்பா, 12 ஓவர் மேட்ச் ப்பா. நாங்க 95 ரன்ஸ் அடிச்சோம். அவங்க 10 ஓவர்ல 78 ரன் அடிச்சாங்க.அப்புறம் கடைசி  இரண்டு ஓவர்ல 18 ரன் அடிக்கணும். 11 வது ஓவர்ல எட்டு ரன் அடிச்சாங்க.  அப்டியே  மேட்ச் போய்  கடைசி மூணு பால்ல 4 ரன் தான் அடிக்கணும். அப்புறம் ரெண்டு பால்ல நாங்க ரன்னே குடுக்கல. ஆனா கடைசி பால்ல 4  அடிச்சு ஜெயுச்சட்டாங்க. சான்சே இல்ல!"

"டேய் , தோத்தா மேட்சுக்கு தான் இவ்ளோ பில்ட்- பா?"

"தோத்தொமா , ஜெயுச்சொமாங்கறது  முக்கியமில்ல " இந்த மாறி ஒரு இன்ட்ரஸ்டிங் மேட்ச் ,சான்சே இல்ல!

என்னுள் ஏதோ மாற்றம் உருவாகி கொண்டிருந்தது..

எனக்கும் நான் விளையாடி கொண்டிருந்த மேட்ச் பிடித்தே தான் இருந்தது. எதையோ வெற்றி என்று எண்ணி கொண்டு என்னுடைய மேட்சின் சுவார்யசத்தை நானே குறைத்து கொண்டு இருக்றேனோ என்று தோன்றியது.

எது எப்படியோ இந்த மன மாற்றத்தை சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்று கொண்டிருந்தேன்.


1 comment:

  1. மன மாற்றத்தை சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்று கொண்டிருந்தேன்.

    வாழ்த்துகள் 1

    ReplyDelete