Saturday, June 12, 2010

ரயில் வண்டி


இன்றுவிடுமுறை. மதிய உணவு உண்ட பின் அசுவராஸ்யமாய் ஒரு புத்தகம் படித்து கொண்டிருந்தேன். திடீர் என்று புகை படம் எடுக்கலாம் என்று ஆர்வம் பிறந்தது. நண்பனை அழைத்து கொண்டு வீட்டின் அருகே புகை படம் எடுக்க தீர்மானித்தேன். நண்பனும் உற்சாகமாய் கிளம்பினான். அப்பொழுது தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிறிது சாரல் மனதில் உற்சாகத்தை அதிகரித்தது. வீட்டின் அருகே சில புகை படங்கள் எடுத்த பின்பு அருகே உள்ள ரயில் பாலத்துக்கு சென்றோம். நண்பன் ரயில் வண்டியை புகை படம் எடுக்க யோசனை கூறினான். ரயில் வண்டி என்ற சொல்லை கேட்ட உடன் மனதில் இனம் புரியாத ஒரு குதுகலம்.

என் இந்த குதுகலம் என்று சிந்தித்தேன். சிறு வயது முதலே ரயில் வண்டியின் மிது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்தேன். அது குழந்தை பருவத்தில் பெரியவர்கள் "ரயில் பாரு ரயில் பாரு... " என்று சொன்னதால் உண்டான ஈர்ப்பு என்று தோன்றவில்லை . சிறு வயதில் ரயில் வண்டியை பார்பதிலே ஒரு தனி ஆர்வம் இருந்தது. என்னுடைய ஆச்சி விட்டிற்கு கோடை விடுமுறையில் சென்று இருப்பது வழக்கம். அங்கிருந்து இருந்து ரயில் நிலையம் சிறுது தொலைவில் தான் இருந்தது. ரயில் வண்டியில் இருந்து வரும் ஹாரன் ஓலி நன்றாய் ஆச்சி வீட்டில் கேட்கும் . நான் மாடிக்கு ( தட்டு என்று நாகர்கோயிலில் அழைப்பார்கள்) சென்று அங்குள்ள சிறு ஜென்னலில் ரயில் தெரிகிறதா என்று பார்பேன். வெறும் தென்னை மரங்களாக தெரியும். ஆனாலும் பல முறை முயற்சிர்த்திருகிறேன்.

சிறு வயதில் ரயில் வண்டியில் போவதை விட அதை பார்பதில் ஆர்வம அதிகம் இருப்பதை உணர்திருகிறேன். சில சமயம் பேருந்தில் செல்லும் போது ரயில் கடக்கும் பாதையில் பேருந்து நிற்கும் பொழுது,காத்திருக்கும் அசுவ்கரியத்தை விட, ரயிலை பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால்
சரக்கு ரயில் என்றால் சப் என்று இருக்கும் . அது ஏன் சரக்கு ரயிலுக்கும் பயணிகள் ரயிலுக்கும் இந்த பாகு பாடு என்று தெரியாது.
அதே போல் ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலுக்காக காத்திருப்பதும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியே! சிறு வயதில் எதை பார்த்தாலும் ஆச்சர்யம் , குதுகலம். தூரத்தில் தெரியும் சிவப்பு விளக்கு , நின்று கொண்டிருக்கும் பெரிய பெரிய ரயில் வண்டிகள் , தண்டவாளங்கள் . ரயில் நிலையம் மனதை கொள்ளை கொள்ளும் இடம் தான். ரயில் தாமதமாக வருவது என்றால் இன்னும் அதிக மகிழ்ச்சி. அந்த மக்கள் வெள்ளம்.. விளக்குகள் , ஓசைகள் எல்லாம் திருவிழாவை ஒத்து இருக்கும்.

சிறுது வயது ஏறி , பள்ளி மட்டும் கல்லூரி பருவத்தில் ரயில் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருவதாகவே அமைந்தது. அதுவும் ரயில் பயணத்தின் பொது மழை வந்தால் .. அந்த சில் காற்று , ஜன்னல் வழியாக ஓடி வரும் மழை நீர். அந்த மகிழ்ச்சியான உணர்வினை விளக்வே கவிஞன் ஆகலாம்.

வயது அதிகரித்து மனம் சிறுது பக்குவ பட்டு விட்டது என்று எண்ணி நான் தொலைத்த உற்சாகமான விசயங்களில் ரயில் பத்தின அந்த பிரமிப்பும அந்த பயணத்தில் இருந்த அந்த ஆனந்ததையும்.

அடுத்த முறை ரயில் பயணம் செல்லும் போது திரு விழா செல்லும் உற்சாகத்துடன் செல்ல போகிறேன்...

2 comments:

  1. తెలుగు లో ట్రాన్స్ లేట్ చేసి చెప్పినందుకు ....நன்றி

    ReplyDelete