Tuesday, June 8, 2010

Kadhal Unarvugal

இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி ...

சமிபத்தில் ஒரு தமிழ் படம் பார்த்தேன் . அதில் வரும் மிக பிரபலமான வரி ..
" காதல நாம தேடி போக கூடாது .. அதுவா வரணும் .. நம்ம போட்டு தாக்கணும் ". அழகான வரிகள். கேட்ட உடன் நம் வாழ்வில் காதல் என்று ஒன்று நிகழ்ந்தால் அது இப்படி தான் இருக்க வேண்டும் என எண்ண வைக்கும் வரிகள் ... அனால் எல்லோர் வாழ்விலும் எல்லாம் ஒரே போல் நிகழ்வதில்லை. என்னுடைய காதல் கதை அதை போன்றது அன்று .. அது மிகவும் மெதுவாக அழகாக பூத்த ஒரு குறிஞ்ச மலர் ...

முதலில் அவளை பார்த்த தருணத்தில் எந்த ஒரு உணர்வும் ஏற்பட வில்லை.. அவள் ஒரு சாதாரண பெண்ணாக தோற்றம் அளிதாள். அமைதியான முகம். சாந்தமான குரல். சட்டென்று எதற்கும் இயங்காமல் , மிக பொறுமையாய் , நளினமாய் அவள் செயல்கள் .. தீர்கமான பார்வை.. இது தன் அவள் .. அவள் எந்த தருணத்தில் என்னுள் நுழைந்தால் ? அது என்னக்கு நிச்சயமாக தெரியாது .. ஆனால் அது கால சுழற்சியில் மிக பொறுமையாக நடந்த ஒரு நிகழ்வென்று எனக்கு தெரியும்..

காதல் உணர்வு .. இதை பற்றி நான் நிறைய கேள்வி பட்டதுண்டு .. சில மருத்துவர்கள் வட்ட மேஜையில் அமர்ந்து "காதல் என்பது ஹார்மோன்கள் சுரந்து ஏற்பெடும் ஒரு இயற்கையான உணர்வு " என்று விளக்கம் அளிப்பார்கள். காதலர்களுக்கு பிடிக்காத ஒரு விளக்கம் . நான் ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகின்றது. காதலில் ஒருவன் விழுகிறான் .. அவனில் ஒரு பகுதியை இழக்கிறான். துணையை தனில் ஒரு பகுதியாய் நினைக்கிறான் ..அதில் கரைகிறான் .. அற்புதமான விளக்கம். அற்புதமான விளக்கம் என்பதை விட என் மனதுக்கு பிடித்த விளக்கம் என கூரலாம். பெருமையாய் இருகின்றது .. நான் காதலில் விழுந்தது .

நாட்கள் செல்ல செல்ல என் காதல் பொறுமையாக வலிமை பெற்றது.. என்னை அது ஆட்கொண்டது .. என் மனதை அபகரித்தது .. முழவதுமாக என் வாழ்வை நிறைத்தது . எல்லா நாட்களும் அவள் நினைவாய் .. சொர்கத்திலும் நரகத்திலும் ஒரே நேரத்தில் வாழும் ஒரு வாழ்வாய் என் காதல் என்னுள் விஸ்வ ரூபம் கொண்டது.

விஸ்வ ரூபம் கொண்ட காதல் கடலை போன்ற ஆழத்துடன் மனதில் தேங்கி நின்றது .. அந்த கடல்அவளை காணும் தருணத்தில் அலைகளாய் கண்கள் முலமாக அவளை சென்று அடைய துடிக்கும் .. ஆனால் அவ்வலைகள் அவளிடத்தில் சிறிதும் அதிர்வினை ஏற்படுத்த வில்லை.
அந்த தீர்க்கமான பார்வை முன் என் அலைகள் வலுவிழந்து .. பின் வந்து கடலை சேரும். முழு காதல் கடலுடன் நான்.

காதல் உணர்வு மிகவும் அச்சார்யமானது .. அது மனதில் பரவசத்தையும் கொடுக்கும் .. துன்பதையும் கொடுக்கும் .. அன்பினையும் வளர்க்கும் .. பகைமையையும் தூண்டும் .. பகிர்தலை புரியவைக்கும் .. எனினும் சுயநலத்தை உணர வைக்கும் .. அது சகல உணர்வினை தருவது போல் தைரியத்தையும் தரும் .. மிக கொடுரமான பயத்தையும் தரும் ..

மனிதன் மனதில், இவ்வுனர்வுகுளுக்கு மத்தியில் எப்போதும் தேர்வு செய்யும் சுதந்திரம் இருதும் .. சில தருணங்களில் சில உணர்வுகள் வலு பெற்று இருக்கும் ..கரணம் இன்றி .. ஆம் என்னுள் என்னை அறியாமல் என் காதல் சொல்ல எனக்கு தைரியம் இல்லை..காரணம் அற்ற பயம் ... நான் வெறுக்கும் பயம்

நாட்கள் சென்றது .. என்னுள் காதல் கடலாய் .. பயம் அதற்கு ஆணை யாய் ..

காலம் மனிதனை மாற்றும். மாற்றம என் உள்ளும் நிகழ்ந்தது .. நான் தைரியமாய் அவள் முன்னால்.. காதல் சொல்ல தயாராய் .. என உணர்வகளை வார்த்தைகளாகி ..அவள் முன்னால் நிற்கின்றேன்..
அவள் அதே தீர்க்கமான பார்வையுடன் .. " நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும் .."

நான் பரவசத்துடன் "சொலுங்க"

" எங்கப்பா எனக்கு மேரேஜ பிக்ஸ் பண்ணிட்டாரு " நான் வேலைய ரிசைன் பண்ண போறேன் "

"ஒ அப்டியா ரொம்ப சந்தோசம் .. "

"நான் வரேன் " ..

"ஓகே . விஷ் யு ஆல் தி பெஸ்ட் . "

என்னுள் இருந்த காதல் கடல் ஆழம் அதிகம் பெற்று பாரம் அதிகம் ஆனது போல் ஒரு உணர்வு

அதே பாரத்துடன் வாழ்வை கடப்பது என்று முடிவு செய்தேன் .. பாரமாய் இருந்தாலும் .. சுகமாய் இருந்தது அந்த உணர்வு ..

15 comments:

 1. climax .. sapaya irundalum .. first kadhai nala konjam adjust pani konga ..,

  ReplyDelete
 2. unbelivable that this your first short storie .

  My heartly wishes .becoming fan to your blogs and stories :).

  ReplyDelete
 3. Azhagana, nerthiyana kadhal urai :)

  aanaal nanba unadhu kadhalin seetrathayum, unarvugalayum nandraga unarthiya nee... un kadhal valiyai kathai aarambathil konjam serthirukkalaamo endru thonugirathu. athanaal thaan un kadhalin valiyai silaraal unaramudiyaamal pogum.

  ennai pondra makku sambranigal.. purivatharkaaga sonen. just oru suggestion thaan.

  un penavin mye theeravendum, kaakidhathil kadhai nirayavendum.

  Vaazhthukkal
  Anand C

  ReplyDelete
 4. hey Machan,

  You are becoming one hella story teller.

  So does the hero go to her wedding and eat curd rice/sambar rice ??

  Machan good attempt, add some fantasy ending like Minnale machan :)

  Atleast in stories we can have positive endings!!

  btw is it ur ending? or stories ending ;)

  ReplyDelete
 5. lalaku dol dappi ma !

  Raghavan, Nice try !

  You said its Kurinchi Malar !
  But when you describe you have described more fear part of love than the beauty ! Atleast i felt so.....

  ReplyDelete
 6. @Meenakshi THanks a lot

  @Anand Thanks for your Suggestion. I ll try to use the same in future stories. Thanks for reading :)

  @Nirmal its not my story .. its an imaginery story. I ll try to write with fantasies in the future. Not immediately .. but when i get some idea .. :)

  @Uday. May be you are right. Some thing is stopping him to express him self from the girl. we have seen many real life characters like that ..:)

  ReplyDelete
 7. நல்ல முயற்சி ;)

  ReplyDelete
 8. @vidya Thanks

  @Anu .. I dont know in what sense you said .. ( I mean its good or bad ) but still thanks .. :)

  ReplyDelete
 9. <<<<<<<<<<<>>>>>>>

  Good lines...right fit for making stories interesting...

  ReplyDelete
 10. i copied some lines.....but it didn't come...

  ReplyDelete
 11. arputham machi!! pasanga india vitu ponale tamil mela neraya patru varuthu.. good start and going. keep it up!!

  ReplyDelete
 12. @arun prasath thanks machi

  @santhosh thanks machi and i wrote this story in india .. :)

  ReplyDelete
 13. hi raag,
  Good try..
  and hope u will improve with spelling in future :) cos it breaks the flow often.

  and as i understand the story begined like this..
  //சமிபத்தில் ஒரு தமிழ் படம் பார்த்தேன் . அதில் வரும் மிக பிரபலமான வரி.. //

  it didnt gave a feel of jumping into story.. it was more towards essay, so was the narration.

  the feel was good, but i felt it was broken on sentence formation in middle.

  and the story didn't justify the relation btw the two before the conversation begins..

  // நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும் ..//
  this statement needs tat kind of justification/hint i feel.

  keep writing!!

  ReplyDelete
 14. @ Naveen

  Thanks :)

  The biggest problem in typing in tamil is that it doesnt give the expected word. Most of the time i dont want to correct it then and there because it stops my flow of thought. So i have to look for a better editor.

  And regarding all other points .. My story is a narration .. that is right .. the story records only the feelings of the person who fell in love rather than the happening of the story itself.

  The biggest differenence between a movie and a story i feel is .. Only the thought flow and feeling can be made as a story rather than recording the actual incidents itself.. i dont know how much i am successful in that ..

  I ll take ur inputs ... let me see how i can use them in the future

  ReplyDelete